திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; 150 பயணிகள் அவதி…!
திருச்சியில் இருந்து ஷார்ஜா நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று(03-09-2025) காலை 4.40 மணிக்கு ஷார்ஜா நோக்கி புறப்பட ஏர் இந்தியா விமானம் தயாரானது. அதில், 150 பயணிகள் அமர்ந்திருந்தனர். அப்போது விமானி,இறுதிகட்ட சோதனை யில் ஈடுபட்டார். அப்போது அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதைஅடுத்து விமானம் ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக 150க்கும் மேற்பட்ட பயணிகள் விமானத்துக்குள்ளேயே அமர வைக்கப்பட்டனர். நீண்ட நேரம் போராடியும் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படாததால் பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்திலிருந்து இறக்கப்பட்டு விமான நிலையத்தில் அமர வைக்கப்பட்டனர். இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு வருகிறது. ஒரு வேளை சரி செய்யப்படாவிட்டா ல் அவர்கள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. சமீப காலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
Comments are closed.