திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கோட்டப்பாளையம் ஊராட்சி வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி. இவர் துறையூரிலுள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். வலையப்பட்டியில் இருந்து தினமும் பள்ளிக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்படவே, ஆசிரியை தேவி துறையூர் சித்திரைப்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து தனது இரு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். தேவிக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை கடந்த சில மாதங்களாக பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகி்றது. தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக பணி புரிவது மட்டுமின்றி தனது வீட்டிலேயே மாணவர்களுக்கு அவர் டியூசன் வகுப்பு நடத்தி வருகிறார். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு டியூசன் வகுப்புகள் நடத்தியதின் மூலம் மாணவர்களிடையே மிக நெருக்கமாக தேவி பழகியதாகவும், ஒரு சில மாணவர்களிடம் நள்ளிரவில் அலைபேசியின் வாயிலாக கொஞ்சிக் குலாவுவதையும் மாணவர்களின் பெற்றோர்கள் கண்டறிந்துள்ளனர். மாணவனின் பெற்றோர், தனிமையில் வசித்து வந்த ஆசிரியை தேவியை வீட்டிலேயே சென்று சத்தம் போட்டிருக்கின்றனர். பின்னர் இதுகுறித்து போலீஸிலும் புகார் தெரிவித்தனர். இந்தப் புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், புகாரில் உண்மைத்தன்மை இருந்ததால் ஆசிரியை தேவியை போக்சோ சட்டத்தி்ன் கீழ் கைது செய்து திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர். மாணவனையும் போலீஸார் சிறார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். கணக்கு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியை மாணவனை கரெக்ட் செய்ததால் பாலியல் வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.