தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வானது, பிப்ரவரி 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்ரவரி 1-ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்படுகிறது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மி.லி., 750 மி.லி., 1000 மி.லி கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி, 500 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்துக்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.