Rock Fort Times
Online News

ஜூன் 4ல் டாஸ்மாக் பார் லீவு

வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4-ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் உள்ள சில்லறை விற்பனை மதுபான கடைகள், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள், எப்.எல் 2 முதல் எப்.எல் 11 முடிய உள்ள பார்கள் (எப்எல் 6 நீங்கலாக) என அனைத்து மதுபானக் கடைகளும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4- ஆம் தேதி காலை 12 மணி முதல் இரவு 10மணி வரை மூடப்பட்டிருக்கும். அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்வதையும், வேறிடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்