தமிழ்நாடு யாதவ மகாசபை திருச்சி மாவட்டம் சார்பில் மாவீரன் அழகுமுத்துக்கோன் 268- வது குருபூஜை விழா… * ஜூலை 13-ம் தேதி நடக்கிறது!
தமிழ்நாடு யாதவ மகாசபை திருச்சி மாவட்டம் சார்பில், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் 268-வது குருபூஜை விழா திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள புதிய வெங்காய மண்டி வணிக வளாகத்தில் ஜூலை 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில் நடக்கிறது. விழாவில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற நமது சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்படுகிறது. விழாவிற்கு திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்க தலைவர் எஸ்.வெள்ளையப்பன் தலைமை தாங்குகிறார். திருச்சி மாவட்ட யாதவ மகாசபை தலைவர் ஏ. தங்கராஜ் அனைவரையும் வரவேற்று பேசுகிறார். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன், மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, 57- வது வார்டு திமுக கவுன்சிலர் டி.முத்து செல்வம், 37-வது வார்டு அதிமுக கவுன்சிலர் அனுசுயா ரவிசங்கர், 36-வது வார்டு திமுக கவுன்சிலர் கே.கார்த்திகேயன், தென்னிந்திய யாதவ மகாசபை மாவட்ட தலைவர் ஏ. குணசேகரன், மாநில தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் எம்.ஆர்.மாயழகு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், திருவெறும்பூர் யாதவ சங்கம் எம்.பழனியப்பன், கே.கே. கிருஷ்ணமூர்த்தி, காளிப்பட்டி சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரி முதன்மை பங்குதாரர் மற்றும் முதல்வர் பூபாலன், மருங்காபுரி ஒன்றியம் ராசு பட்டையதாரர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநில செயலாளர் எம். தமிழ்ச்செல்வம், மாநில செயலாளர் வி. ஸ்ரீதர், திருச்சி ராக்போர்ட் டைம்ஸ் வாரஇதழ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர்.லெஷ்மி நாராயணன், யாதவ மகா சபை திருச்சி மாவட்ட செயலாளர் ஜெ. பாலகிருஷ்ணன், ஆக்ஸினா குரூப்ஸ் தொழில் அதிபர் கே.ஜெய்கர்ணா, ஸ்ரீரங்கம் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். தென்னிந்திய யாதவ மகாசபை மாநில தலைவர் டிகேவி வெங்கடேசன், பாரத முன்னேற்றக் கழக நிறுவனர் கே.பாரத ராஜா, தென்னிந்திய யாதவ மகா சபை மாவட்ட செயலாளர் எம். முத்துக்குமார், மாவட்ட பொருளாளர் ஆர்.கோபிநாத், வழக்கறிஞர் எஸ்.சரவணன், மீனாட்சி பார்மா சந்திரசேகர், முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.நீலமேகம், முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.இளவரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
விழாவில்,
எடத்தெரு நெய்க்கார யாதவ சொந்தங்கள், ஸ்ரீ கிருஷ்ணா யாதவ மேம்பாட்டு கழகம், ஆட்டுக்கார தெரு யாதவ சங்கம், சமஸ் பிரான் தெரு யாதவ சங்கம்,
பிஹெச்இஎல் யாதவ மேம்பாட்டு கழகம், அரியமங்கலம், நவல்பட்டு பர்மா காலனி, திருவானைக்கோவில், திருவரங்கம், பொன்மலை யாதவ சங்கங்கள், 16 ஊர் யாதவ சொந்தங்கள் மற்றும் இளைஞர் அணி அமைப்பு, கீரம்பூர், கல்பாளையம், சமயபுரம் யாதவ சங்கங்கள், திருவெறும்பூர் ஒன்றியம், லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், திருவானைக் கோவில், மருங்காபுரி, துறையூர், முசிறி, உப்பிலியபுரம் ஒன்றியங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். முடிவில் மாவட்ட பொருளாளர் எஸ்.செந்தில்குமார் நன்றி கூறுகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு யாதவ மகாசபை திருச்சி மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Comments are closed.