Rock Fort Times
Online News

கராத்தே போட்டியில் வென்ற தமிழக மாணவர்கள்: ரெயிலில் வந்தபோது பதக்கம், சான்றிதழ்கள் திருட்டு…!

இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய தேசிய அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான கராத்தே போட்டி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நவம்பர் 14 முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 260 சிபிஎஸ்இ பள்ளிகளிலிருந்து 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் திருச்சி திருவெறும்பூர் பெல் ஆர்.எஸ்.கே.பள்ளி சார்பில் மாணவர்கள் பங்கேற்றனர். கராத்தேயின் குமிதே பிரிவில்  பிரணவ் குமார் வெள்ளிப் பதக்கமும், நிகிலேஷ் சிவேஷ் மற்றும் ரோகித் மூவரும்  வெண் கலப்பதக்கமும்   வென்றனர். இந்த நிலையில் பதக்கம் வென்று திரும்பிய கராத்தே மாணவர்களுக்கு திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் பயிற்சியாளர் ஆனந்தகுமார் தலைமையில் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே வெற்றி பெற்ற கராத்தே மாணவர்கள் அந்தியோதயா ரயிலில் திருச்சிக்கு வந்து கொண்டிருந்தபோது கண் அயர்ந்த நேரத்தில் பதக்கங்கள், சான்றிதழ்கள், துணிகள் அடங்கிய பையினை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆன்லைன் மூலம் ரெயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்