Rock Fort Times
Online News

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நிறைவு பெற்றது: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு தேசிய கீதம் பாடப்படவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி வெளியேறினார். அதனைத்தொடர்ந்து ஆளுநர் உரையை சபாநாயகர் மு.அப்பாவு வாசித்தார். இது அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. அடுத்த நாள் (21-ந்தேதி) சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவை நடவடிக்கை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. 22-ந்தேதி முதல் கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து, இன்று(ஜன.24) சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். அவரது பதிலுரையை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெற்றதோடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்