Rock Fort Times
Online News

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி “டிஸ்சார்ஜ்”…!

தமிழக சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் எஸ்.ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரகுபதிக்கு கடந்த சில நாட்களாக இதயத்தில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் , கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும், அதை ஆஞ்சியோ மூலம் சரி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதன்படி, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் முடிந்து இன்று (27-01-2025) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்