பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கை எட்டிப்பிடித்த ‘ஒன் அண்ட் ஒன்லி மாநிலம்’ தமிழ்நாடு தான்- முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்…!
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான கண்காட்சியை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
AeroDefCon -25 கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தமிழ்நாட்டில் முதல்முறையாக தொடங்கி வைத்துள்ளோம். தமிழ்நாடு இந்தியாவை ஈர்க்கும் நிலையில் இருந்து, உலகை ஈர்க்கும் மாநிலமாக உயர்ந்துள்ளது. அனைத்து விதமான வளர்ந்து வரும் தொழில்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதன் அடையாளம் தான் இந்த மாநாடு. புதிய தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களை கண்டறிந்து புதிய தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான தளமாக திகழ்கிறது இம்மாநாடு. தமிழ்நாடு அனைத்து வகையான தொழில்களிலும் தடம் பதித்ததோடு, உற்பத்தி துறையின் ‘லீடர்’ஆக மாறி வருகிறது. இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற ஒரே மாநிலமாக உள்ளது. அனைத்து வகையான தொழில்களிலும் தடம் பதித்து வருகிறது தமிழ்நாடு. உலகளாவிய பொருளாதாரத்தில் முதல் 50 இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. இந்தியாவிலேயே 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கை எட்டிப்பிடித்த ஒன் அண்ட் ஒன்லி மாநிலம் தமிழ்நாடு தான். எதை செய்தாலும் ஆல் ரவுண்டர் ஆக, பெஸ்ட் ஆக இருப்பதால் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி இன்று சாத்தியமாகி இருக்கிறது. தமிழ்நாடு நடத்தும் மாநாடுதான் உலக அளவில் பேசப்படுகின்றன. அனைத்து வகையான வளர்ந்து வரும் தொழில்களை நம் மாநிலம் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் 45,000 தொழிற்சாலைகளுக்கும் மேல் உள்ளன. நாம் அனைத்து வகையான தொழில்களிலும் தடம் பதித்து வருகிறோம். இந்திய விண்வெளி துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed.