18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி விளையாட தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் இளைஞர்களிடையே ஆன்லைன் சூதாட்ட மோகம் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆகவே, ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் தலைமையிலான ஆன்லைன் கேமிங் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த ஆணையம் தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தி கேம் விளையாட தடை விதித்துள்ளது. நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் கேமில் பயனர்களை அனுமதிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைனில் விளையாடுபவர்கள் யார் என்பது குறித்து கண்டிப்பாக நிறுவனங்கள் கே.ஒய்.சி. வாங்க வேண்டும்.ஆதார் மற்றும் ஓடிபி மூலம் ஆய்வு செய்ய வேண்டும். ஆன்லைன் விளையாட்டில் தினம், வாரம், மாதம் எவ்வளவு பணம் செலவாகிறது என்று விளையாடுபவர்களுக்கு ஆன்லைன் நிறுவனம் தகவல் தர வேண்டும். ஆன்லைனில் விளையாடுவோருக்கு ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments are closed.