தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை முகநூல் பக்கத்தை ஹேக் செய்து விஜய் படம் ஒளிபரப்பு- அதிகாரிகள் அதிர்ச்சி…!
தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளிக் கல்வித்துறைக்கு என அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் உள்ளது. இந்த முகநூல் பக்கத்தை 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின் தொடர்கின்றனர். இதில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த தகவல்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு தகவல்கள், பள்ளி பாடம் தொடர்பான வீடியோக்கள் பதிவிடப்படும். இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டு 10-க்கும் மேற்பட்ட சினமா வீடியோக்கள் பதிவிடப்பட்டது. விஜய்யின் மாஸ்டர் படத்தின் இந்தி காட்சி உள்பட 10-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்து முடக்கப்பட்டுள்ளது. சினிமா காட்சிகள் பதிவேற்றப்பட்டிருப்பதைக் கண்டு கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளிக் கல்வித்துறை முகநூல் பக்கம் முடக்கப்பட்டது குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல, பிரபல யூடியூப் சேனலான வில்லேஜ் குக்கிங் சேனலின் முகநூல் பக்கமும் ஹேக் செய்யப்பட்டு ஆபாச புகைப்படங்கள் பகிரப்பட்டதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்ற காரியங்களில் ஈடுபடும் கும்பல் எது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.