தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கேன் குடிநீர் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதில் 20 லிட்டர் குடிநீர் கேன்களின் தரம், பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கேனிலும் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, FSSAI உரிமம் எண் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாசி பிடித்த, அசுத்தமான கேன்களில் தண்ணீர் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கேன் குடிநீரை நேரடியாகச் சூரிய ஒளியில் படும்படி தேக்கி வைக்கக் கூடாது என நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தி உள்ளது. ஒரு குடிநீர் கேனை அதிகபட்சமாக 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்யக் கூடாது என்பது விதியாகவே அறிவிக்கப்பட்டு உள்ளது. குடிநீரில் கால்சியம் (10 – 75 மி.கி/லிட்டர்), மெக்னீசியம் (5-30 மி.கி/லிட்டர்) ஆகிய தாதுக்கள் சரியான அளவில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. முறையான அனுமதி, தரச் சான்றிதழ் இன்றிச் செயல்படும் குடிநீர் ஆலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்து ள்ளது. முறையான அனுமதி, தரச் சான்றிதழ் இன்றி செயல்படும் குடிநீர் ஆலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு தமிழ்நாடு முழுவதும் உள்ள குடிநீர் நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், கடை உரிமையாளர்கள் ஆகியோருக்கு பொருந்தும். கோடை காலத்தில் குடிநீர் தரத்தில் ஏற்படும் குறைபாடுகள் மக்களின் உடல்நலத்தை பாதிக்கும் என்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.