தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
புதிய தலைமைச் செயலராக சாய்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு செய்திக் காகித நிறுவனத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனிச் செயலாளராகவும் இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆயுதப்படை, லஞ்ச ஒழிப்புத் துறை புதிய டிஜிபியாக சந்தீப் மிட்டலை நியமனம் செய்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னர் அதிகாரிகள் மாற்றம் என்பது வழக்கமாக நடைபெறுவதுதான் என்றாலும்கூட, தேர்தலுக்கு 2 வாரங்களே உள்ள நிலையில், தமிழக தலைமைச் செயலரையே அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

Comments are closed.