தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு பாதுகாப்பு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் வக்கீல் சத்தியம் சரவணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கணேசன், சசிகுமார், முத்து, ராஜா கண்ணன், செல்வ கிரங்கு, தர்மலிங்கம், வேலு, அழகர்சாமி, சசிவர்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.
திருச்சி சிறுகனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆடு திருட்டு சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. எனவே ஆடு திருடர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வனத்துறையில் செம்மறி ஆடுகள் மேய்க்க பழைய கட்டண அனுமதி சீட்டு வழங்க வேண்டும். ஆடு வளர்ப்பிற்கு தமிழக அரசு நல வாரியம் அமைக்க வேண்டும். ஆடு வளர்ப்போருக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
