Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் 6 முதல் பிளஸ்- 2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தோ்வு அட்டவணை வெளியீடு… !

தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான 6 முதல் பிளஸ் -2 வகுப்புகளுக்கான காலாண்டுத் தோ்வு அட்டவணை வெளியாகியுள்ளது.  தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் பிளஸ்- 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை உட்பட விவரங்கள் அடங்கிய கல்வி ஆண்டு நாட்காட்டி 2018 ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த கல்வி ஆண்டு 2024-25  அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் பிளஸ்-2 வரை வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது.  அதன்படி, 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு செப்டம்பர் 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு செப்டம்பர் 19 முதல் 27ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்