திருச்சி, பெரிய கடைவீதியில் சுமார் 67 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் முன்னணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான தைலா சில்க்ஸ், வெள்ளி நகைகளுக்கான பிரத்தியேக ஷோரூமை ஆரம்பித்துள்ளது. திருச்சிபெரிய கடைவீதி மலைவாசல் அருகே இரண்டு தளங்களில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள தைலா ஜூவல்லர்ஸ்-ன் திறப்புவிழா கடந்த 3ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இப்புதிய நிறுவனத்தை தைலா சில்க்ஸ் இயக்குனர்களான ஜி.கணபதி ஜி.சுஜாதா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். திறப்பு விழா மற்றும் அட்சய திருதியையை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் வாங்கும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு செய்கூலி மற்றும் சேதாரம் இல்லை. மேலும், மாதத்தவணையில் வெள்ளி நகைகள் வாங்குவதற்கான பிரத்தியேக சிறுசேமிப்பு திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து மாதத் தவணையாக செலுத்தி தங்களுக்கு விருப்பமான வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசுத்துறை அதிகாரிகள், தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.