Rock Fort Times
Online News

பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து த.வெ.க. மகளிர் அணியினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்…!

மகளிர் தினமான இன்று(08-03-2025) பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்கங்கள், கையெழுத்து இயக்கம் நடத்த தமிழக வெற்றி கழக மகளிர் அணியினருக்கு கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, திருச்சி மாநகர் மாவட்டம் த.வெ.க. மகளிர் அணி சார்பாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள காதி கிராப்ட் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான தொடர் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவும், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி மகளிர் அணியினர் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சந்திரா, துணைச் செயலாளர் சாந்த ஷீலா, மகளிர் அணி அமைப்பாளர் ரேவதி, செயற்குழு உறுப்பினர் கல்பனா, ஐஸ்வர்யா, சங்கீதா, மேனகா மற்றும் மகளிர் அணியினை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

                  ADVERTISEMENT…👇

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்