த.வெ.க. மாநாட்டிற்கு சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்த திருச்சி நிர்வாகிகள் 2 பேர் குடும்பத்தினருக்கு விஜய் இழப்பீடு வழங்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஆர். கிஷோர்குமார் வேண்டுகோள்…!
மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர்குமார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்த தமிழக வெற்றிக் கழகம் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்கறிஞர் வி.எல்.சீனிவாசன் மற்றும் மற்றொரு நிர்வாகி கலை ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற செய்தி பேரதிர்ச்சியாக உள்ளது. திருச்சி மாவட்டத்தில் அன்பு தம்பி வி.எல்.சீனிவாசனின் செயல்பாடு மிகுந்த பாராட்டுக்குரியது. எனவே, விக்கிரவாண்டி மாநாட்டிற்கு செல்லும் வழியில் உயிரிழந்த வி.எல்.சீனிவாசன் உள்ளிட்டவர்களின் குடும்பத்தினருக்கு கட்சியின் தலைவர் விஜய் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதோடு அவர்களது குடும்பத்தினரின் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை ஏற்க மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் வக்கீல் கிஷோர்குமார் தெரிவித்துள்ளார்.

Comments are closed.