Rock Fort Times
Online News

பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது துரித நடவடிக்கை… திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் உறுதி..!

திருச்சி, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று (22.12.2025) திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, ஆணையர் லி. மதுபாலன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, ஜெயநிர்மலா, நகரப் பொறியாளர் பி.சிவபாதம் மற்றும் நகர்நல அலுவலர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்