தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. 5,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தில் பயணிகளின் நலன் கருதி அதிநவீன தொழில்நுட்பத்துடன் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. உள்நாட்டு பயணிகளுக்கு எண்ட்- டு-எண்டு இ- போர்டிங் வசதியை அமல்படுத்திய முதல் விமான நிலையம் இது. மேலும், இலவச வை-பை இணைப்பு, பலவகை உணவகங்கள், வரி இல்லாத ஷாப்பிங், மருந்தகம், ஏடிஎம்கள், குழந்தை பராமரிப்பு அறைகள், தகவல் மையம், பேக்கேஜ் சேவைகள், அவசர மருத்துவ சேவை போன்ற அனைத்து வசதிகளும் விமான நிலையத்திற்குள் உள்ளன. லக்கேஜ் ஏற்றி செல்லும் பயணிகள் ட்ராலியில் கூட அதி நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ட்ராலியில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன ஸ்மார்ட் தொடு திரையை பயன்படுத்தி உள்ளே சென்றால் தாம் பயணம் செய்யும் விமானம், இருக்கை எண், லக்கேஜ் ஸ்கேன் செய்யும் கவுண்டர் எண், எந்த கவுண்டர் வழியாக வெளியேற வேண்டும் என்பன போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த வசதி உள்நாடு, மற்றும் வெளிநாட்டு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வசதி இந்திய விமான நிலையங்களில் ஹைதராபாத் விமான நிலையத்தில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.