தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருச்சி மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சிமுகாம் நடத்த முன்வந்துள்ளது . அதன்படி முகாம் வருகிற மே 1ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு நடக்கிறது . திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, வளைகோல்பந்து, கையுந்துபந்து, கைப்பந்து, ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக், டென்னிஸ், இறகுபந்து, குத்துச்சண்டை, வூசு மற்றும் மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளுக்கு சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. எனவே, மேற்கண்ட பயிற்சி முகாமில் மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவி்களுக்கு தினமும் ஊட்டச்சத்து வழங்கப்படும். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியிலும் 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் . இந்ததகவலை, திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

**mitolyn reviews**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.