Rock Fort Times
Online News

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பில் சுகந்தி ராஜாவுக்கு மாநில இணை செயலாளர் பதவி…!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருச்சி மாவட்ட துணை தலைவராக பொறுப்பு வகித்து வந்த சுகந்தி ராஜாவுக்கு தற்போது மாநில இணை செயலாளராக புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இதையொட்டி மாநில தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா மற்றும் பொதுச் செயலாளர் வீ.கோவிந்தராஜுலு ஆகியோரை நேரில் சந்தித்து புதிய பொறுப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது மண்டல தலைவர் எம்.தமிழ்செல்வம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாநகரத்தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்