Rock Fort Times
Online News

நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு! சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகளை காத்த பேருந்து ஓட்டுனர்! துரதிஷ்டவசமாக மரணம் !

திருநெல்வேலியிலிருந்து சென்னை நோக்கி சுமார் 40 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து நேற்று ( பிப்.13ம் தேதி ) நள்ளிரவு புறப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விராலூர் பிரிவு சாலை அருகே வந்தபோது, பேருந்தை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த கண்ணன்(48) என்பவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஓட்டுநர் பேருந்தை சாமர்த்தியமாக சாலையின் வலதுபுறம் உள்ள நடுப்புற தடுப்பின் மீது ஏற்றி, விபத்து ஏற்படாமல் பயணிகளை காப்பாற்றி உள்ளார். ஆனால், ஓட்டுநர் கண்ணன் மாரடைப்பால் உயிரிழந்தார். விபத்தில் இருந்து மீண்டதற்கு மகிழ்ச்சி அடைவதா? ஓட்டுநர் இறந்ததை நினைத்து வேதனை அடைவதா? என்று தெரியாமல் பயணிகள் சோகமடைந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்