இந்திய துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இன்று(09-03-2025) அதிகாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 73 வயதான ஜகதீப் தன்கருக்கு லேசான நெஞ்சு வலி மற்றும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயவியல் துறைத் தலைவர் டாக்டர் ராஜீவ் நாரங் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். தற்போதுஅவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று ஜகதீப் தன்கரின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
ADVERTISEMENT…👇
Comments are closed.