Rock Fort Times
Online News

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் திடீர் மாற்றம்- புதிய தலைவராக எல்.ரெக்ஸ் நியமனம்….

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக வி.ஜவகர் பதவி வகித்து வந்தார்.   இந்நிலையில் அவர் திடீரென மாற்றப்பட்டு புதிய தலைவராக எல்.ரெக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  இவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதலின் போில்   தமிழக பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால்  நியமித்துள்ளாா். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எல். ரெக்ஸ் திருச்சி மாநகராட்சி 39-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலராகவும் உள்ளார். தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரெக்ஸ்சுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும்  உறுப்பினர்கள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்