இந்திய துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்ஹர் உடல் நலக்குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து
செப்டம்பர் 9ம் தேதி துணை ஜனாதிபதிக்கான தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். தேஜ கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், எப்படியும் வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவு எடுத்துள்ள இந்தியா கூட்டணியில் வேட்பாளர் யார் என்பதில் இழுபறி நீடித்து வந்தது. திருச்சி சிவா, தமிழக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, காந்தியின் கொள்ளு பேரன் ஆகியோர் பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில் துணை ஜனாதிபதி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த இவர், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும், குவாஹாட்டி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.