Rock Fort Times
Online News

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல்களை பெற வருகிற 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் !

தமிழகத்தில் நடைபெற்ற முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல்களைப் பெற விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதன்படி, இன்று ( மே -13 ) முதல் வருகிற 17-ம் தேதி வரை அரசு தேர்வுகள் இணையதளமான https://www.dge.tn.gov.in க்கு சென்று பிறந்த தேதியை பதிவு செய்து தங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்த பிறகு, மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்கண்ட அதே இணையதளத்தில் மறு கூட்டலுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இரு நகல்கள் எடுத்து 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை அந்தந்த மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தை மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். இதற்கான முகவரியும் இணையதளத்தில் அறிந்து கொள்ள பிரத்தியேக வசதி செய்யப்பட்டுள்ளது. மறுமதிப்பீட்டுக்கு பாடம் ஒன்றுக்கு ரூ.505 மறு கூட்டல் செய்ய பாடம் ஒன்றுக்கு ரூ.205 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்