திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட போலீஸ் காலனியில் தெரு நாய்கள் அதிகம் உள்ளது.இந்த நாய்கள் அந்தப் பகுதியில் அந்நியர்கள் யாரேனும் வந்தால் அவர்களை உள்ளே விடாமல் குரைத்து அனுப்பி விடும். இரவு நேரங்களிலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஐந்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இன்று( செப்.1) இறந்து கிடந்தன. இது, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெருநாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா? அல்லது வன விலங்குகள் ஏதேனும் கடித்து உயிரிழந்தனவா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.