Rock Fort Times
Online News

திருடு போன செல்போன்களை இனி ஈஸியா கண்டுபிடிக்கலாம்… இன்று முதல் புதிய திட்டம் அமல்..!

தொலைந்த மற்றும் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க மத்திய அரசு உருவாக்கியுள்ள புதிய திட்டம் இன்று ( 17.05.2023 ) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. தொலைந்து போன அல்லது திருடு போன மொபைல் போன்களை பிளாக் செய்து அவற்றை டிராக் செய்ய அகில இந்திய அளவில் ஒரு கண்காணிப்பு அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதற்காக CEIR என்ற அதாவது, மத்திய உபகரண அடையாளப் பதிவு தொழில்நுட்ப அமைப்பின் செயல்பாடு இன்று முதல் தொடங்குகிறது. திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன மொபைல்கள் குறித்து புகாரளிப்பதை எளிதாக்கி அவற்றை பிளாக் செய்வதே CEIR இன் அடிப்படை நோக்கமாகும். இதன் மூலம் செல்போன்கள் திருடப்படும் எண்ணிக்கை குறைந்து, திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன மொபைல்களை காவல்துறையினர் உதவியுடன் கண்டறியலாம். அத்துடன் குளோன் செய்யப்பட்ட அல்லது போலியான மொபைல்களைக் கண்டறிவது எளிதாக்கப்பட்டுள்ளது. குளோன் செய்யப்பட்ட மொபைல்களின் பயன்பாட்டை இதன்மூலம் கட்டுப்படுத்த முடியும்.  மேலும் இந்த அமைப்பு இன்று முதல் இந்தியா முழுவதும் இயங்கவுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்