தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மிசோரம் தவிர மற்ற 4 மாநிலங்களில் இன்று ( 03.12.2023 ) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதலில் தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. அதன்பின் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பாஜக 160 தொகுதிகளிலும், காங்கிரஸ் 68 இடங்களிலும், மற்றவை 2 இடங்களிலும் முன்னிலை உள்ளன.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.இதில், பாஜக 110 தொகுதிகளிலும், காங்கிரஸ் 73 இடங்களிலும் , மற்ற கட்சிகள் 16 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இந்த மாநிலத்தில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதால் அங்கு பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்கிறது.
இதேபோல சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 35 இடங்களிலும், பிற கட்சிகள் 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதன்மூலம் இந்த மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைக்கிறது.
தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சியின் ஆட்சி இருந்தது. ஆனால், அந்த கட்சி இந்த முறை பெரும் சரிவை சந்தித்துள்ளது. தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் 65 தொகுதிகளிலும், பி.ஆர்.எஸ் கட்சி 40 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும் பிற கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ஆக தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. இதேபோல சட்டமன்றத் தேர்தல் நடந்த மிசோரம் மாநிலத்தில் இன்று வாக்குகள் எண்ண பட இருந்தன. ஆனால் அங்கு கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையோ உள்ளதால் இன்று ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில் அந்த மாநிலத்தில் மட்டும் நாளை ( 04.12.2023 ) வாக்குகள் எண்ணப்படுகின்றன.
Comments are closed, but trackbacks and pingbacks are open.