திருச்சியில் சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு சிலை – தேவேந்திர குல வேளாளா்கள் நலச்சங்கம் கோாிக்கை
சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு திருச்சியில் சிலை அமைக்க வேண்டும் என அமைச்சர் கே.என்.நேருவிடம் தேவேந்திர குல வேளாளர்கள் நலச்சங்கத்தினா் கோரிக்கை வைத்துள்ளனா். தமிழக தேவேந்திர குல வேளாளர் நலச்சங்கம் மற்றும் இந்திர தேச மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் பாச.ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள், தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே.என்.நேருவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டியல் மாற்றம் மற்றும் மாவீரன் சுந்தரலிங்க குடும்பனாருக்கு உருவச்சிலை அமைக்க வேண்டும். சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு திருச்சியில் உருவச்சிலை அமைத்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் சுரேஷ் கண்ணன், மாநில பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் மின்னல்சங்கர், மாநில துணை பொது செயலாளர் விசுவை. பழ.சுந்தரம், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.செல்வம், தலைமை அலுவலக செயலாளர் கொட்டப்பட்டு ரமேஷ், கூத்தைப்பார் முருகேசன், குழுமணி காத்தமுத்து மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.