பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1349-வது சதய விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர்கள் ப.குமார், ஜெ.சீனிவாசன், பரஞ்ஜோதி ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, அமைப்பு செயலாளர் ரத்தினவேல், திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் கருப்பையா, பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் சந்திரமோகன், அணி நிர்வாகிகள் கார்த்திகேயன், நசீமா ஃபாரீக், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.