தஞ்சாவூரில் நடைபெற்ற 66-வது மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் திருச்சி மாவட்டத்தின் சார்பாக திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கு கொண்டனர். 19 வயதிற்குட்பட்ட 4×100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் மாணவர்கள் அம்பரிஷ், சனாக், நவீன் கிறிஸ்டோபர், சபரிஷ் ஆகியோர் 42.94 வினாடிகளில் ஓடி தங்கப்பதக்கம் வென்று கேம்பியன் பள்ளி வைத்திருந்த முந்தைய மாநில அளவிலான சாதனையை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளனர். 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாய் விக்னேஷ் வெள்ளி பதக்கமும்,

19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் 2.07 மீட்டர் உயரத்தைத் தாண்டி மாணவன் அம்பரிஷ் புதிய சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் முதல்வர் அருட்சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ் வாழ்த்தினார். மேலும், சிறப்பான முறையில் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பாராட்டினார்.


Comments are closed.