Rock Fort Times
Online News

தமிழக பாஜக அணிகளுக்கு மாநில நிர்வாகிகள் நியமனம்…!

தமிழக பாஜக​வில் அமைப்​பு ரீ​தி​யாக நிர்​வாகி​கள் நியமனம் நடை​பெற்று வரு​கிறது. அதன்​படி, மாநில நிர்​வாகி​கள் நியமிக்​கப்​பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்​களுக்கு முன்பு பாஜக​வில் 25 அணி பிரிவு​களுக்கு மாநில அமைப்பாளர்கள் நியமிக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில், அப்​பிரிவு​களுக்கு மாநில இணை அமைப்​பாளர்​கள், மாநில செய​லா​ளர்​களை நியமித்து நயி​னார் நாகேந்​திரன் அறி​விப்பு வெளி​யிட்​டுள்​ளார். அதன்​படி, மகளிர் அணி தலை​வ​ராக கவிதா காந்த் ஏற்​கெனவே நியமிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், துணை தலை​வர்​களாக சங்​கீதா மதி​வாணன், மதிவதனகிரி, மீனா வினோத்​கு​மார், புவனேஸ்​வரி, சரண்​யா, லீலா​வதி உள்பட 8 பேரும், மாநில பொதுச் செய​லா​ளர்​களாக நதியா சீனி​வாசன், வித்யா ரமேஷ், தேன்​மொழி உள்​ளிட்​டோரும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.மேலும், 8 மாநில செய​லா​ளர்​கள், ஒரு மாநில பொருளாளர், 5 மாநில செயற்​குழு உறுப்​பினர்​கள் நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இதே​போல், மற்ற பிரிவு​களுக்​கும் 2 மாநில இணை அமைப்​பாளர்​களும், 11 மாநில செய​லா​ளர்​களும் நியமிக்கப்பட்​டுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்