Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா : 2 லட்சம் பக்தா்கள் சாமி தாிசனம்…

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி விழா. இவ்விழா பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 12-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான கடந்த 13 ந்தேதியிலிருந்து நம்பெருமாள் தினமும் காலை மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு அலங்காரங்களில் புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தாா்.

 

    

பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான  22ம் தேதி காலை நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் நேற்று ( 23.12.2023 ) அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளுவதற்காக நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, ரத்தின அங்கி, கிளி மாலை உள்பட பல்வேறு திரு ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.  பரமபத வாசல் திறப்பை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 70 பேர் “பரமபத வாசல்” தரிசனம் செய்துள்ளனர்.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 916

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்