ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலிருந்து ஆந்திரா ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவனத்திற்கு வஸ்திர மரியாதை…..
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் வஸ்திர மரியாதை மற்றும் பகுமானம் எனப்படும் சீர் பொருட்கள் உள்ளிட்டவை ஆந்திர மாநிலம் துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் மூல பிருந்தாவனமான மந்திராலயத்திற்க்கு இன்று ( 31.08.2023 ) வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சே. மாரியப்பன், செயல் அலுவலர் மா.வேல்முருகன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் கலந்து கொண்டனா். மேற்படி வஸ்திர பகுமானத்தை மந்த்ராலயம் மடாதிபதி மற்றும் கைங்கரிய பரார்களால் பெற்றுக் கொள்ளப்பட்டது. மந்த்ராலய மடாதிபதி அனைவருக்கும் ஆசி வழங்கினார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.