உலக புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம். உண்டியல்களில் செலுத்தப்படும் காணிக்கை பொருட்கள் மாதம்தோறும் திறந்து எண்ணப்படும். அதன்படி இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று ( 29.09.2023 ) நடைபெற்றது. இதில் 73,86,659 ரூபாய் ரொக்கமும், 128 கிராம் தங்கமும், 910 கிராம் வெள்ளியும் மற்றும் வெளிநாட்டு பணம் 256-ம் இருந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர்.
Next Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.