திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள உத்தரவீதி, சித்திரை வீதி, அடையவளஞ்சான் போன்ற பகுதிகளில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பலர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்த வீடுகள் கோவில் நிலத்தில் இருப்பதால், அவற்றைப் பத்திரப்பதிவு செய்ய முடிவதில்லை. ஆகவே, அடிமனையில் குடியிருக்கும் தங்களுக்கு பட்டா அல்லது சொந்த உரிமை வேண்டும் என பல ஆண்டுகளாக குடியிருப்பு வாசிகள் போராடி வருகின்றனர். ஆனால், கோவில் நிர்வாகமோ, கோவில் இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கக்கூடாது அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கானது 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்று(20-02-2026) தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி சுவாமிநாதன் தனது தீர்ப்பில், இந்த வழக்கானது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. சித்திரை வீதி, உத்திர வீதி, அடைய வளஞ்சான் வீதிகளில் வசித்து வரும் 40க்கும் மேற்பட்டவர்கள் அடிமனை கேட்டு வருகிறார்கள். அடிமனை அரங்கனுக்கு சொந்தமானது. எனவே, அதில் வசிப்போர் சொந்தம் கொண்டாட முடியாது என தீர்ப்பளித்தார். மேலும், 3 மாதங்களில் அந்த வீடுகளை காலி செய்ய வேண்டும். கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களையும் ரத்து செய்ய உத்தரவிட்டார். கோவில் சார்பாக வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜரானார்.

Comments are closed.