புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் சிலர் இன்று(07-09-2024) காலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை சிறை பிடித்தனர். அத்துடன் அவர்களின் 3 விசைப்படங்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 14 மீனவர்கள் மற்றும் விசைப்படகை காங்கேஷன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். தமிழக மீனவர்கள் 14 பேர் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.