Rock Fort Times
Online News

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி வருகை.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் உங்களது பணி குறித்த கேள்விக்கு, 25 கோடி செலவில் தமிழகத்தில் முதல் முறையாக முதலமைச்சர் கோப்பை போட்டி பல்வேறு மாவட்டத்தில் நடத்தி உள்ளோம். விரைவில் இறுதி போட்டி நடத்தி சென்னையில் முதலமைச்சர் கையால் விளையாட்டு விரர்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளோம். தஞ்சை செங்கிப்பட்டி அருகே ஸ்போர்ட்ஸ் சிட்டி எப்போது கொண்டு வருவீர்கள் என்ற கேள்விக்கு, அதற்காக பார்வையிட தான் வந்துள்ளேன், விரைவில் விபரங்களை கூறிகிறேன் என்றார். மேலும் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ காடுவெட்டி தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்