Rock Fort Times
Online News

கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கம்…!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஏற்கனவே பத்தாம் வகுப்பு 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து வருகிறது. இந்த தேர்வுகள் முடிந்த பிறகு கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாட பலர் சுற்றுலா மற்றும் உறவினர் வீடுகளுக்கு செல்கின்றனர். அந்தவகையில் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு திருச்சி- தாம்பரம், தாம்பரம்- திருச்சி இடையே வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு வருகிற 29-ந் தேதி முதல் ஜூன் மாதம் 29-ந் தேதி வரை காலை 5.35 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06190) இயக்கப்படுகிறது. வாரத்தில், செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 5 நாட்கள் இயக்கப்படும் இந்த ரெயில் மதியம் 12.30 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு வருகிற 29-ந் தேதி முதல் ஜூன் 29-ந் தேதி வரை செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 5 நாட்கள் சிறப்பு ரெயில் (06191) இயக்கப்படுகிறது. மாலை 3.45 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் இந்த சிறப்பு ரெயில் இரவு 10.40 மணிக்கு திருச்சியை வந்தடைகிறது. இந்த ரெயில், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்), பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று(22-04-2025) மதியம் தொடங்குகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்