குடியரசு தினம் மற்றும் வார விடுமுறையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அந்தவகையில் சென்னை எழும்பூரில் இருந்து (வண்டி எண் 06135 )கன்னியாகுமரி அதிவிரைவு ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு நாளை (சனிக்கிழமை) பகல் 1 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும். இதே ரெயில் மறுமார்க்கத்தில் வண்டி எண் 06136 கன்னியாகுமரி-சென்னை கடற்கரை (பீச்) அதிவிரைவு ரெயில் வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 9.35 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, 27-ந் தேதி காலை 10.15 மணிக்கு சென்னை கடற்கரையை சென்றடையும். இந்த ரெயில் நெல்லை, விருதுநகர், மதுரை, திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய வழித்தடங்கள் வழியாக செல்லும். மேற்கண்ட தகவல் திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments are closed.