Rock Fort Times
Online News

தீபாவளியையொட்டி காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கம்!

தீபாவளியையொட்டி புண்ணிய தலங்களுக்கு சென்று தரிசிக்கும் வகையில் கங்கா ஸ்ணானம் சிறப்பு ரயில் யாத்திரையை ரயில்வே சுற்றுலாக் கழகமான ஐ. ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது. இராமநாதபுரத்திலிருந்து வரும் 28ஆம் தேதி புறப்படும் தீபாவளி கங்கா ஸ்ணானம் சிறப்பு யாத்திரை, தீபாவளி அன்று காசியில் கங்கா ஸ்ணானம் செய்து,பிரயாக்ராஜ், கயா ஆகிய இடங்களுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை வழியாக செல்லும் சேது சூப்பர் பாஸ்ட் விரைவு ரயிலில் இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஒன்பது நாட்கள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ.29,420 கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலும் தகவல்களைப் பெற 82879 31964 மற்றும் 82879 31977 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி வந்த தமிழக ஆளுநருக்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு..

1 of 881

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்