Rock Fort Times
Online News

சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் நிலை பெற வேண்டி திங்களூா் கோவிலில்  சிறப்பு ஹோமம்

தஞ்சாவூர் மாவட்டம் திங்களூரில் உள்ள கைலாசநாதர் கோவில் நவகிரகங்களில் ஒன்றான தலமாகும். இந்த கோவிலில் சந்திரன் தனி சன்னதியில் மேற்கு திசை நோக்கி அருள்பாலித்து வருகிறார். சந்திரன் பரிகார தலமாகவும் திகழ்ந்து வருகிறது. தோஷ நிவர்த்திக்காக கைலாசநாதர் இங்கு வந்து சந்திரனை வழிபட்டதாக சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்தக் கோவிலில் இன்று சந்திரயான் -3 விண்கலம், விண்ணில் ஏவப்படுவதை ஒட்டி அது விண்கலத்தில் நிலை பெற வேண்டி தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பு சார்பில் சந்திர பிரிதி ஹோமம் நடத்தப்பட்டது. கைலாசநாதர் மூலவர் சன்னதி முன்பு சிவாச்சாரியார்கள் பல்வேறு வகையான யாகப் பொருட்களை கொண்டு சந்திர பிரிதி ஹோமம் நடத்தினர். யாகம் நிறைவு பெற்றதும் சந்திரனுக்கு விபூதி, திரவிய பொடி, மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னர் அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விண்கலம் வெற்றிகரமாக நிலைபெற வேண்டிக் கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்