திருச்சியில் முதன் முறையாக மூத்த குடி மக்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்…!
மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா பங்கேற்பு...
தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தி வருகிறார். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள், தமிழக முதல்வரின் முகவரி மனுக்கள், இணையவழியில் கொடுக்கப்பட்ட மனுக்கள், மாவட்ட ஆட்சிரியரிடம் கொடுக்கப்பட்ட மனுக்கள் மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பெறபட்ட மனுக்கள் மற்றும் பொதுமக்களிடம் நேரடியாக பெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கிடைத்திட வேண்டி கடந்த 6 மாதங்களில் பல சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் (பெட்டிசன் மேளா) நடத்தியும் தீர்வு கண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக இன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண அரங்கில் மாநகரத்தில் வசிக்கும் மூத்த குடிமக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமில் போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா கலந்து கொண்டு மூத்த குடிமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில், 100 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து புகார் வரும் காவல்நிலையத்திற்கு உட்பட்ட காவல் அதிகாரிகளை அழைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிட்டார்.



Comments are closed, but trackbacks and pingbacks are open.