தமிழ்நாடு முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் முகவரி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளரால் பெறப்பட்ட 44 மனுக்கள் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். வீ.வருண்குமார் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் முன்னிலையில் மேற்படி மனுதாரர்கள் திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் 38 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெறலாம். 94874 64651 என்ற எண்ணில் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.