பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் தசரதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை , மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் (நடைமேடை எண்-7), அரியலூர் , ஜெயங்கொண்டம் (நடைமேடை எண்-8) திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் (நடைமேடைஎண்-5) ஆகிய ஊர்களுக்கு நாளை (ஜன.9) 450 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், 10-ந்தேதி 450 கூடுதல் பேருந்துகளும், 11-ந்தேதி 100 கூடுதல் பேருந்துகள், 12-ந்தேதி 750 கூடுதல் பேருந்துகள், 13-ந்தேதி 850 கூடுதல் பேருந்துகள், 14-ந்தேதி 800 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும். மேலும், திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய ஊர்களுக்கும், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் நாளை 250 கூடுதல் பேருந்துகளும், 10-ந்தேதி 250 கூடுதல் பேருந்துகளும், 11-ந்தேதி 150 கூடுதல் பேருந்துகள், 12-ந்தேதி 250 கூடுதல் பேருந்துகள், 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் 575 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும். மேலும், பொங்கல் முடிந்து திரும்ப 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.