சனி, ஞாயிறு வார விடுமுறையை யொட்டி பயணிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகை, வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை. வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 190 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் திருச்சியிலிருந்து கோவை, திருப்பூர், மதுரைக்கும், அந்த ஊர்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை தஞ்சாவூர், நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 75 பேருந்துகள் என மொத்தம் 265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோல விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் ஊர் திரும்ப டிசம்பர் 29, 30 ஆகிய நாட்களில் சென்னை தடத்தில் 100, பிற தடங்களிலும் 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். வெளியூர் செல்லும் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Comments are closed.