Rock Fort Times
Online News

திருச்சியில் சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு…!

திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் நிலையம் போக்குவரத்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மூர்த்தி (58). இவர் நேற்று காலை நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானாவில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே, சக காவலர்கள் அவரை நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று(08-12-2024) அதிகாலை உயிரிழந்தார். சிறப்பு உதவி ஆய்வாளர் மூர்த்தி  திருச்சி ஆலத்தூர் பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் கல்லூரி படிக்கும் ஒரு மகன் உள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்