திருச்சி மாநகராட்சி பகுதியில் இறந்து போன சாலை வியாபாரிகளின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க சிறப்பு ஏற்பாடு… * மார்ச் 19ம் தேதி முதல் 26 ம் தேதி வரை நடக்கிறது
திருச்சி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம், நடைபாதை விற்பனையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அடையாள அட்டை வழங்குதல் ஆகிய பணிகளின் அவசர அவசியம் கருதி, இம்மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு செய்யப்பட்ட 6220 சாலையோர வியாபாரிகளின் வாக்காளர் பட்டியல் விவரங்கள் இம்மாநகராட்சியின் அனைத்து வார்டுகுழு அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டது. இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, சாலையோர வியாபாரிகளின் வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்தவர்கள் பெயரை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இறந்தவர்களின் பெயர்களை நீக்கம் செய்ய அனைத்து வார்டு குழு அலுவலகங்களில் 19.03.2025 முதல் 26.03.2025 ம் தேதி வரை மாநகராட்சி அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட உள்ளது. மேலும் இதுகுறித்து தகவல் தெரிவிக்க விரும்பும் வியாபாரிகள் மற்றும் நபர்கள் சம்மந்தப்பட்ட வார்டுகுழு அலுவலக உதவி ஆணையரிடம் உரிய சான்று மற்றும் ஆவணங்ளுடன் மார்ச் 19 முதல் 26ம் தேதி வரை அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Comments are closed.